காப்பி அடிக்க நினைக்காதீங்க....!!!

Saturday, March 5, 2011

என் குழந்தை



பள்ளிப்பருவத்தில் என் பனிகுடத்தில்
பூத்த பனிப் பூவே!


முன்னூறு நாட்கள் மூச்சடக்கி முக்குளித்து
நானெடுத்த முத்துச்சரமே!

உனை ஈன்றெடுக்கும் வேளையில்
எனக்குள் எண்ணிலடங்கா வேதனைகள்
அத்தனையும் பறந்ததடி
உனை ஈன்றெடுத்த அந்நிமிடமே
காற்றோடு கலந்ததடி.

வெண்பஞ்சு மேகம்போல் வெள்ளிக்குறுத்துபோல்
பட்டுப்பூபோன்று தேனில்குழைத்த சந்தனம்போல்
என்கண்கள் உனை கண்டபோது-எனை
நான் மறந்துநின்றேன் என் மெய்சிலிர்க்கக்கண்டேன்

உன் பிஞ்சுகண்ணம் நான் தொட்டபோது
எனக்குள்ளா? இருந்தது இந்த ஏஞ்சல்-என
எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்


புல்லாங்குழலின் சங்கீதம்போல்
உன் சின்ன சினுங்களில்- என்
தேகம் மொத்தம் சிறகடிக்கக்கண்டேன்


நான் பூமியில் பிறந்ததிற்கான பலனை
என்னவனிடம் கண்டேன்
என் பெண்மையின் முழுமையை
உன்னில்நின்றுதான் கொண்டேன்